கும்பிடு பூச்சியின் குமுறல்_Praying mantid's bluster

 கும்பிடு பூச்சியின் குமுறல் 


Courtesy : pininterest.com 

மலரா மாயமா !!! இதழின் அழகை அழகாய் நகலெடுப்பதேன்??

பாசாங்கு தான் இங்கு பாத்திரமே...

பரம்பரை புத்தி தான் 

கும்பிடு போட்டாலும் மறைந்தே தான் வாழ்க்கை 

மரபணுவே நிறம் பூசி கொண்டது நித்தம் நடிக்க

என் செய்வது???

தலைமுறைக்கு வழிவிட்டு தானே தலை சாய முடியும் 

நானும் மலரென நினைத்து நீ தான் மதி மங்கி போனாயே...

இது தான் என் பிழைப்பின் வழி !!!

வயிற்று உணவுக்கு வறியவன் கண்ட வழி !!!

வல்லவனுக்கு வல்லவன் வகுத்த வழி !!!

என் பிழைப்பின் வழி !!!


  


Comments

Popular posts from this blog

State Butterflies of India